குருநகர் படகு விபத்து – இருவர் பலி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறைக்கு அண்மையில் இன்று (06.03) படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் இருவர் உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் , அதில் குருநகர் பகுதியை சேர்ந்த எம்.ஜோசப் (வயது 80) மற்றும் பிரான்ஸிஸ் (வயது 57) மரணமடைந்ததுடன் மேலும் 2 பெண்கள் ஒரு ஆண் என  மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் 8 பேர் சாதாரண நோயாளர் சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

பாலைத்தீவு திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் சென்ற படகு ஒன்றே இன்று காலை இவ்வாறு விபத்துக்குள்ளானது. குறித்தப் படகில் 25 பேர் பயணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share this Article
Leave a comment