யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் குருதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குருதிக் கொடைக்கு மக்கள் முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கியின் வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், குருதிக் கொடையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படவில்லை. அதனால் இரத்தவங்கியில் குருதித் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
கடந்த 28 ஆம் திகதி 49 சேகரிப்பும், 49 வழங்கலும் இடம்பெற்றன என்றும், முதலாம் திகதி 17 சேகரிப்பும் 48 வழங்கலும் இடம்பெற்றன என்றும், 2ஆம் திகதி 33 சேகரிப்பும் 39 வழங்கலும் இடம்பெற்றன என்றும் மருத்துவமனைத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
இந்த குருதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பொதுமக்கள் குருதிக் கொடையளிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குருதிக் கொடை வழங்குபவர்கள் அல்லது குருதிக் கொடை முகாம்கள் ஏற்பாடு செய்பவர்கள் 0772105375 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.