1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி புறப்பட்ட குமுதினிப்படகு நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் மறிக்கப்பட்டு கொடுரமான முறையில் 36 பயணிகள் கொலை செய்யப்பட்டதுடன் பலர் காயங்களுக்கு உள்ளானர்கள்.
இவ் குமுதினிப் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஏற்பாட்டில் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக எதிர்வரும் 15ம் திகதி (மே – 15) மாலை 06.30 மணிக்கு இடம் பெறவுள்ளது.
இவ் நிகழ்வில் கனமான நினைவுகளோடு அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.