கிளிநொச்சி மாணவி மாயம்!- தகவல் தெரிந்தோர் அறியத்தரவும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023(கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த புவனேஸ்வரன் ஆர்த்தி என்பவரை கடந்த 8 ஆம் மாதம் 05 ஆம் திகதியில் இருந்து காணவில்லை,

இவரை பல்வேறு இடங்களில் ஒரு மாத காலமாக தேடியும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரை இலங்கையின் எப்பிரதேசத்திலாவது கண்டவர்கள் இருந்தால் உடனடியாக 0774941522, 0772144553 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு அவரது தந்தை கோரியுள்ளார்.

Share this Article