கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத் தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞனே இன்று(ஜனவரி 8) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலத்தை சம்பவ இடத்தில் கிளிநொச்சி நிதிமன்ற நீதிவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் உடலை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.