கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் தீவுப்பகுதியில் வீதிஅபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தகலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர்தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து தொடர்பானசெயற்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன்மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின்செயலாளருமான தம. பிரதீபன் ஆகியோரது பங்குபற்றுதலுடன் கடந்த ஒக்.25 அன்று அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம்மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி வேலைகளின்உடைய முன்னேற்றம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
வேலணை,ஊர்காவற்துறை , காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து, பெருந்தெருக்கள்துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விசேட நிதிஒதுக்கீட்டின் கீழ் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள வீதிஅபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுப்பது தொடர்பாககலந்துரையாடப்பட்டதோடு கிடைக்கப்பெற்ற விசேட நிதியானது தற்போதுகிடைக்கப்பெற்றுள்ளமையினாலும், கடல் கடந்த போக்குவரத்து மற்றும்இனிவரப்போகும் பருவகால மழை காரணமாக வேலைத்திட்டங்களைவிரைவாக செயற்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் குறித்துகலந்துரையாடப்பட்டு வேலணை,ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வீதிஅபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுக்க முடியுமெனவும்ஆனால் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்வேலைத்திட்டங்களை மேற்கொள்வதில் இடர்பாடுகள் உள்ளதாகவும்அதனடிப்படையில் நெடுந்தீவில் முழுமையாக 3 வீதிகளின்வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்மென தெரிவிக்கப்பட்டதோடுநெடுந்தீவில் உள்ளே வேறு வீதிகளை புனரைமைப்பது தொடர்பில் ஆராய்ந்துமுடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பிரதேச சபை தவிசாளர்கள் , உள்ளூராட்சி அமைச்சின்செயலாளர் ,வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மேலதிக அரசாங்கஅதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், வேலணை ,காரைநகர்,ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்திஅதிகார சபையில் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்திதிணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர், பெருந்தெருக்கள்துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல்நிரோசன் ரட்ணாயக்க அவர்களது பிரத்தியோக இணைப்பாளர், மாவட்டஒருங்கிணைப்புகுழு அலுவலக இணைப்பாளர் மற்றும் துறை சார்ந்தஅதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.