மன்னார், முசலிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை காயாக்குளியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயிருந்த நிலையில் புத்தளம் கற்பிட்டி கடற்பகுதியில் மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.
கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் காயாக்குளி கடற்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மற்றும் 19 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போன மீனவர்கள் இருவரையும் சக மீனவர்கள் தொடர்ச்சியாக தேடுதல் நடத்தி வந்தனர். இந்த நிலையில் புத்தளம் கற்பிட்டி கடற்பகுதியில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் படகொன்று காணப்பட்டதை கற்பிட்டி மீனவர்கள் அவதானித்தனர். அதனையடுத்து படகையும் அதற்குள் இருந்த இரு இளைஞர்களையும் மீட்டு கடற்கரைக்குக் கொண்டு வந்தனர்.
படகில் இருந்த இருவரும் சிலாவத்துறை காயாக்குளிப் பகுதியில் காணாமல் போன இளைஞர்கள் என்பதை உறுதிப்படுத்திய கற்பிட்டி மீனவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை பழுதடைந்த படகு மற்றும் இரு மீனவ இளைஞர்களையும் காயாக்குளி மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.