காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையில் 5,555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றில் சுமார் 4,200 விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரணத்திற்காக, இழப்பீட்டுக்கானஅலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காணாமல்போன ஆட்கள்பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் ரூபராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுஇதுவரையில் எமதுகாணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 21,000முறைப்பாடுகள்கிடைக்கப்பெற்றன.

அவற்றில் முப்படையினர், பொலிஸார், இரட்டைப்பதிவுகள் நீக்கப்பட்ட நிலையில்14,988விண்ணப்பங்கள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

இவற்றில் 5,555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில்4,200விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரண கொடுப்பனவுக்காக இழப்பீட்டுஅலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Share this Article