காங்கேசன்துறை துறைமுக நவீன பயணிகள் முனையம், நேற்று (ஜூன் 16) கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர், யாழ் இந்தியத் துணைத் தூதுவர், கப்பல்துறை அமைச்சின் செயலர், துறைமுகங்கள் அதிகார சபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படை தளபதி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் ஒரு கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
கப்பலில் வந்தடைந்த இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை அமைச்சர் அடங்கிய குழாம் வரவேற்றதோடு கப்பலின் கப்டனுக்கு நினைவுப் பரிசிலும் கையளிக்கப்பட்டது.