யாழ் காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறைமுகமாக அபிவிருத்தி செய்யமாட்டோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நேற்றையதினம் (செப். 18) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போக்குவரத்து தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் , காங்கேசன்துறை துறைமுத்தின் அபிவிருத்திகள் துரிதப்படுத்தப்படுவதோடு யாழ்பலாலி விமான நிலைய பாதுகாப்புக்காக சுவீகரிக்கப்பட்டு வைத்துள்ளமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என துறைசர் அமைச்சர் விமல்ரட்நாயக்காவிடம் கோரிக்கை முன்வைத்தார். இதான் போது பதில் அளித்தஅமைச்சர் விமல் ராநாயக்கா யாழ் காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறைமுகமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம் என்றார்.

மேலும் அமைச்சர்…..
ஏனெனில் வணிகத்துறை முகமாக அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமானகாரணிகள் ஏதுவாக இல்லாத நிலையில் அம்பாந்தோட்டை மற்றும் ஒலிவில்துறைமுகங்கள் போன்று காங்கேசன் துறைமுகத்தை மாற்ற எமது அரசாங்கம்விரும்பவில்லை.
அதுமட்டுமல்லாது காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்குஇந்தியா வழங்கிய நிதி போதாது என தெரிவித்தார்.
இதான் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்இந்தியாவிடம் வேண்டுமானால் நாங்கள் பேசி மேலதிக நிதியை பெற்றுதருகிறோம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுங்கள் என கூறினார்.
பதில் வழங்கிய அமைச்சர் இந்தியாவிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க பல தடவைகள் பேசி உள்ளார் நாங்களும் பேசியுள்ளோம் ஆனால்வணிகத் துறைமுகமாக அதை மாற்றுவதற்கு முடியாது என தெரிவித்தார்.
இதன்போது கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்நீங்கள் எவ்வாறு ஆய்வு செய்யாமல் பொருத்தமில்லை என கூற முடியும்என்றார்.
பதில் வழங்கிய அமைச்சர் ஆய்வறிக்கை இருக்கிறது விரைவில்பாராளுமன்றத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் என பதில் வழங்கினார்.
யாழ்ப்பாண விமான நிலைய பாதுகாப்புக்காக சுவீகரிக்கப்பட்ட பொது மக்களின்காணிகளை எப்போது விடுவிப்பீர்கள் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குஏன் நட்ட வீடு வழங்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீண்டும்கேள்வி எழுப்பினார்.
பதில் வழங்கிய அமைச்சர் மக்களின் காணிகள் மக்களுக்கு என்பது எமதுஅரசாங்கத்தின் நிலைப்பாடு யாழ்பாண விமான நிலைய பாதுகாப்புக்காககைப்பற்றிய காணி விடுவிப்பு தொடர்பில் தற்போது கூற முடியாது பாதுகாப்புதரப்பினருடன் கலந்துரையாடியே பதில் வழங்க முடியும் என்றார்.
யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் பற்றிஇதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
எவ்வாறான பகுதிகளில் வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது, எப்பகுதிகளுக்கு விசேட போக்குவரத்து சேவை தேவைப்படுகின்றது உள்ளிட்டவிடயங்களை அமைச்சர் சுட்டிக்காட்டிருந்தார்.
அதேபோல தீவு பகுதிகளுக்குரிய பாதுகாப்பான கடல்போக்குவரத்து பயணம்மற்றும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்திருந்தார்.
நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்து யாழ்.மாவட்டத்தை மையப்படுத்தியதானபொதுபோக்குவரத்து, வர்த்தக போக்குவரத்து மற்றும் சந்தைநடவடிக்கைகளுக்கான போக்குவரத்து என்பன பற்றியும் கவனம்செலுத்தப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்றஇக்கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்டசெயலாளர் எம்.பிரதீபன், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்புஅதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.