கல்லுண்டாய் மாதிரிக் கிராமத்தில் குடியிருக்கும் மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு கல்லுண்டாய் இளைஞர் சேவைகள் மன்றத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மானிப்பாய் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்ததுடன், காணி அனுமதிப்பத்திரமும் உரியவர்களுக்கு வைபவ ரீதியாக விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.