கலாசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் முன்னாள் அதிபர்கள் பிரதி அதிபர்கள் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேற்று(ஒக்ரோபர் 01) கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் நூற்றாண்டு கல்லூரி தினம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளை, முன்னாள் அதிபர் திரு. வீ. கருணைலிங்கம், முன்னாள் பிரதி அதிபர் செல்வி. வி. வேலுப்பிள்ளை உள்ளிட்டோர் இதற்கென விரிவுரையாளர், திருமதி பா.சர்மிளாவால் வடிவமைக்கப்பட்ட நூற்றாண்டு கேக்கை (Cake)வெட்டி மகிழ்ச்சியை பரிமாறினர்.

இதன்போது பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் ஆசிரிய மாணவர்களாலும் , முன்னாள் ஆசிரிய மாணவர்களாலும் இசைக்கப்பட்டது.

Share this Article