கட்டுநாயக்க விமான நிலையத்தில், 180 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமானமதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து போதைப்பொருளை எடுத்துச் செல்லமுயன்றபோது, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின்அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதான கனேடிய பிரஜை எனதெரியவந்துள்ளது.
ஹஷிஷ் பொட்டலங்கள்
அவர் இன்று காலை டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குவந்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபரின் பயணப்பெட்டியில் 6 பொலித்தீன் பைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 18 கிலோகிராம் 253 கிராம் எடையுள்ள 72 சிறிய ஹஷிஷ்பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் போதைப்பொருள் கையிருப்பும் மேலதிகவிசாரணைக்காக விமான நிலையப் போதைப்பொருள் பணியகத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கம் தெரிவித்துள்ளது