தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபை (NAITA) மற்றும் நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை(CIDA) ஏற்பாட்டில் கட்டடநிர்மாணத்துறையில் பயிற்சி பெற்று தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் பெற்ற பயிலுநர்களை தொழில் ரீதியில் ஊக்குவிக்கும் முகமாக தொழிற்கருவிகள் இன்று (நவம்பர் 22) காலை 9.30 மணியளவில் தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபையின் அலுவலகத்தில் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் இ.திருமுருகன், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஜெ.துசாந்தன், CIDA மாவட்ட இணைப்பாளர் திரு. சுதன் பரிசோதகர்கள் உத்தியோகத்தர்கள் பயிலுநர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.