கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமானஇராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களை நெடுந்தீவு கடற்றொழில் சமாசபிரதிநிதிகள் கடந்த டிசம்பர் 15 அன்று அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பில் நெடுந்தீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளான வீதிபுனரமைப்பு, கரையோர அணைக்கட்டு, போக்குவரத்து , சுற்றுலாத்துறை மற்றும்குடிநீர் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பிலான தேவைகள் , மறுசீரமைப்புகள் தொடர்பில் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மாவட்டத்திற்கான வீதி அபிவிருத்தி திட்டமிடலின் தரப்படுத்தலில்நெடுந்தீவு பிரதான வீதி முதலாவதாய் கரிசனைகொள்ளப்படும் எனவும் எதிர்வரும் வருடத்தின் முற்பகுதியில் குறித்த பணி முன்னெடுக்கப்படுமெனஇதன்போது அமைச்சரால் உறுதியளிக்கப்பட்டது.
மேலும் நெடுந்தீவின் வீதி மற்றும் கடலணை உள்ளிட்ட திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பாரிய நிதி மீளத்திரும்பியமை கவலை தருவதாகவும் அமைச்சரால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
நெடுந்தீவிற்கான பிரதேச அபிவிருத்தி கூட்டத்தை விரைவாக நடத்தி அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வுகளும் வழங்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.