கடற்தொழிலுக்கு செல்லும் கடற்தொழிலாளர்கள் சில சமயங்களில் கடற்படையினரால் தாக்கப்படுவதாகவும் கடற்படையினர் தங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் தங்களு;கான கடற்தொழில் உறுதிப்படுத்தும் அடையாள அட்டைகள் இன்மையால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் கடற்தொழிலாளர் சங்க சமாசம் மற்றும் சங்க அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்
நேற்றைய தினம் நெடுந்தீவுக்கு வருகை தந்த ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் நெடுந்தீவு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் வைத்து நெடுநதீவு கடற்தொழிலாளர்களின் சங்க பிரதிநிதிகள் சமாச அங்கத்தவர்களை சந்தித்து இடம் பெற்ற கலந்துரையாடலில் மேற்குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன
இதனைக் கருத்திற் கொண்ட அமைச்சர் அவர்கள் உடனடியாக கடற்படையினரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற்று வழங்குவதாக உறுதிமொழியளித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்
மேலும் படகுகள் அமைப்பதற்கான பாதுகாப்பன துறைமுகங்கள் மற்றும் வெளிச்வீட்டின் அவசியம் போன்ற விடயங்களும் அமைச்சருக்கு முன்வைக்கப்பட்டது அவற்றினைக் கருத்திற் கொண்ட அமைச்சர் மிக விரைவாக அதனை மேற்கொண்டு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.