கடமையை பொறுப்பேற்றார் சுகாதார அமைச்சின் புதிய செயலாளர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையின் சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக வைத்திய கலாநிதி பாலித குணரத்ன மஹிபால கடமைகளை பொறுப்பேற்றார்.

வைத்திய கலாநிதி மஹிபால இதற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார்.

அவர் ஏப்ரல் 2019 இல் பாகிஸ்தானில் WHO பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார்.

சட்ட விரோதமான இம்யூனோகுளோபுலின் ஊசி ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா விலகியதைத் தொடர்ந்து வைத்திய கலாநிதி பாலித குணரத்ன மஹிபால சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article