ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு சட்டமூலம்-உயர் நீதிமன்ற தீர்மானம் நாடாளுமன்றில் அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.  

அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலமானது அரசியலமைப்பிற்கு முரணானதாகத் தெரியவில்லை எனவும், குறிப்பிட்ட திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றப்படலாம் என உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21/11) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 121-வது பிரிவின் கீழ் இந்த மசோதா உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமா அதிபரால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், நீதிமன்றத்தால் வழிகாட்டப்பட்ட மேலதிக திருத்தங்களுடன் சேர்த்து, குழு நிலையில் இணைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதன்படி, சட்டமா அதிபரால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு இணங்க, மசோதாவின் நீண்ட தலைப்பு, முகவுரை மற்றும் குறிப்பிட்ட பிரிவுகள் திருத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால் உறுதியளிக்கப்பட்டபடி, மசோதாவிலிருந்து பிரிவு 6 நீக்கப்படும் என்றும், முதல் அட்டவணையின் 15, 16, 17 மற்றும் 33 ஆகிய பிரிவுகளும் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Share this Article
Leave a comment