ஐஸ் போதை பொருளை நுகர்ந்த இளைஞன் யாழில் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதை பொருளை நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்றுமுன்தினம்(ஜூன் 26) திங்கட்கிழமை இரவு ஐஸ் போதை பொருளை நுகர்ந்த நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article