2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதானஅமைப்பாளராக திருமதி உமாசந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் இவருக்கான நியமணக் கடிதம் நேற்றைய ( ஆகஸ்ட் 05) தினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவியாகவும், இலங்கை பாராளுமன்றத்தின்எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் பதவி வகித்துவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.