ஐஓஎம் தூதுக்குழுவினர் யாழ் மாவட்ட செயலரை சந்தித்து கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
ஐஓஎம் தூதுக்குழுவினர் நேற்று(பெப்ரவரி 22) யாழ் மாவட்ட செயலருடன் சந்திப்பினை மேற்கொண்டு யாழ்மாவட்டத்திலிருந்து சட்டவிரோத புலம்பெயர் நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் கலந்துரையாடினர்.
ஐஓஎம் உடைய இலங்கை உதவி வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினர்நேற்று காலை 10.30 மணியளவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது சட்டவிரோத புலம்பெயர் நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பிலும், மேலும் யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, தொழில் வழிகாட்டல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
Share this Article