எரிபொருள் விலையில் நாள்தோறும் மாற்றம்!- எரிசக்தி அமைச்சர் தகவல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எரிபொருள்களின் விலைகளை நாளாந்தம் திருத்தம் செய்யும் முறைமையை அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் நடந்த கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் எரிபொருள் விநியோகம் மற்றும் புதிய எரிபொருள் நிலையங்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகப் பேசப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தானியங்கி கணினிமயப்படுத்தப்பட்ட முறைமைக்கு மாற்றுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Share this Article