எரிபொருள் பவுசர் சாரதி போதைப்பொருளுடன் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

போதையில் எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடமையில் இருந்து ஐஸ்போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சங்குபிட்டி பாலத்தை அண்மித்த பகுதியில், பொலிஸார் நேற்று (செப். 08) மேற்கொண்ட வீதிச்சோதனை நடவடிக்கையின் போது, போதையில் , எரிபொருள் தாங்கியை செலுத்தி சென்ற சாரதியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை சோதனையிட்ட போது , அவரது உடமையில்இருந்து, ஐஸ் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், சாரதி ஜஸ் மற்றும் கஞ்சா பயன்படுத்திய நிலையில் வாகனத்தை செலுத்தியமைஉறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார்மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article