எமக்களித்த வாய்ப்பை தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விரலுக்கேற்ற வீக்கம் என்பதற்கமைய முடிந்தளவு செய்து முடித்துள்ளோம். எதிர்காலத் திட்டங்களையும் சமர்ப்பித்தே சபையில் இருந்து விடைபெறுகின்றோம். ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் என்று தெரிவித்துள்ளார் ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தலைவர் எம்.காந்தன்.
உள்ளூராட்சிச் சபைகளின் பதவிக்காலம் நேற்று (மார்ச் 19) நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில், தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ள பதிவொன்றிலேயே ஊர்காவற்றுறைப் பிரதேச சபைத்த தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்பிற்கினிய பிரதேச மக்களுக்கு எமது கரங்கூப்பிய நன்றிகள். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது வழமை போன்று எமது தலைவர் தோழர் டக்ளஸ் தேவாவுடன் அணிதிரண்டு அவரின் வீணைக்கு ஆணை வழங்கினீர்கள்.
எமக்களித்த வாய்ப்பை தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விரலுக்கேற்ற வீக்கமென்பதற்கமைவாக முடிந்தளவிற்கு செய்துமுடித்தது மட்டுமல்லாது எதிர்காலத்திட்டங்களையும் சமர்ப்பித்தே பிரதேச சபையிலிருந்து விடைபெறுகிறோம்.
எமதருமை மக்களுக்கு எனது சிரம்தாழ்த்திய நண்றிகளைத் தெரிவிப்பதுடன் மக்களுக்கான சிறந்த சேவையை வழங்கக்கூடிய வகையில் நேரகாலம் பாராமல் ஆலோசனைகளை வழங்கி வழிநடத்திய தலைவர் கௌரவ தோழர் டக்ளஸ்தேவானந்தாவுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். எமது சபை நடவடிக்கைகளில் கட்சி பேதங்களுக்கு அப்பால் முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடு காணலாம் என்ற வகையில் நாமனைவரும் மக்களுக்கான சேவையில் ஒரே குடும்பமென ஒத்துழைப்பு வழங்கிய உபதவிசாளர், உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவிப்பதுடன் எமது ஆணையை சட்டத்துக்கு ஏற்ப எவ்வித மறுப்பில்லாமல் செயற்படுத்திய எமது சபையின் மதிப்பக்குரிய செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதுடன் எமது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்கிய ஏனையஅரச, அரசசார்ப்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள், பணியாளர்கள் மற்றும் எமக்கு ஆலோசனைகள், வழங்கிய அனைவருக்கும் கரங்கூப்பிய நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி..உங்களுக்கானசேவையில் என்றும் நான். என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் 2011, 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.காந்தன், நான்காவது தடவையாக எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.