நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முதல் அதிபா் உயா் திரு.சி.வி.எட்வேட் நவரட்ணசிங்கம் அவா்களது 113வது பிறந்த தின நினைவு நிகழ்வுகள் நேற்றைய தினம் (பெப்ரவாி 16) யா.நெடுந்தீவு மகாவித்தியால நவரட்ண சிங்கம் கலையரங்கில் இடம் பெற்றது.
நெடுந்துவு பாடசாலைகளின் பழைய மாணவா் மன்றம் கனடா அமைப்பின் நெடுந்தீவு கிளைக்குழு தலைவா் திரு.எட்வேட் அருந்தவ சீலன் அவா்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளா் மதிப்பிற்குாிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவா்கள் கலந்து கொண்டு திரு.எட்வேட் நவரட்ண சிங்கம் அவா்களது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்.
முதல் முதல்வா் நவரட்ணம்சிங்கம் அவா்களைக் குறித்த நினைவுரை இடம் பெற்றதுடன், இந்நிகழ்வில் பாடசாலைகளின் பழைய மாணவா் மன்றம் கனடா அமைப்பினரால் பல்கைலைக்கழக மாணவா்களுக்கான நிதியுதவி வழங்கியதுடன், நெடுந்தீவில் உள்ள எட்டு பாடசாலைகளிலும் கல்வி கற்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட தோ்வு செய்யப்பட்ட குடும்பங்களின் மாணவா்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் நெடுந்தீவு பாடசாலைகளின் அதிபா்கள், கனடா பழைய மாணவா் மன்றத்தின் நிா்வாக உறுப்பினா்கள் மாணவா்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனா்.