தொழில் திணைக்களம் , இலங்கை மத்திய வங்கி என்பன இணைந்து ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக நடத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 15ஆம், 16ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவையில் மக்கள் பின்வரும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கு நிலுவைக் கூற்றுப் பெறுதல்
தேவையான ஆவணங்கள் –
“பி” அட்டை (உங்களிடம் இருக்குமாயின்), அரையாண்டு கணக்குக் கூற்று, ஊழியர் சேமலாப நிதிய சேமிப்புப் புத்தகம்.
தேசிய அடையாள அட்டை
பெயர், தேசிய அடையாள அட்டை இலக்க திருத்தங்கள்
தேவையான ஆவணங்கள் –
செய்யப்பட வேண்டிய மாற்றங்களைத் தெளிவாகக் குறிப்பிடுகின்ற தொடர்பான தொழில் தருனரால் வழங்கப்பட்ட கடிதம்
பின்வரும் ஆவணங்களின் போட்டோப் பிரதி ஒன்று-
தேசிய அடையாள அட்டை
பிறப்புச் சான்றிதழ்
“பி” அட்டை
(மேலே உள்ள பிரதிகள் அனைத்தும் உங்கள் தொடர்பான தொழில் தருநரால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அவசியம்)
ஊழியர் சேமலாப நிதியக் கணக்குகளை ஒருங்கிணைத்தல்
தேவையான ஆவணங்கள்-
சரியான முறையில் நிரப்பப்பட்டு தொடர்பான தொழில் தருநரால் உறுதிப்படுத்தப்பட்ட “ஜி” படிவம் (இரண்டுக்கும் கூடுதலான கணக்குகளை நீங்கள் கொண்டிருக்குமிடத்து ஒவ்வொரு இரண்டு கணக்குகளுக்குமாக தனித்தனியாக “ஜி” படிவத்தை வழங்க வேண்டும்)
“பி” அட்டை
ஊழியர் சேமலாப நிதியக் கணக்குகளைத் திருத்துதல்
தேவையான ஆவணங்கள்-
பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கத்தைத் திருத்துவதற்குத் தேவையான ஆவணஙகள் உட்பட தொழில் ஆரம்பித்ததில் இருந்து சேவை முடிவடைந்தது வரையான பங்களிப்பு விவரங்களை வழங்குதல் வேண்டும்
இறந்த உறுப்பினரின் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளல்
தேவையான ஆவணங்கள்-
கிராம சேவையாளராலும், பிரதேச செயலராலும் உறுதிப்படுத்தப்பட்ட “எல்2” படிவத்துடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
இறந்தவரின் மனைவி அல்லது பிள்ளைகள் மீளளிப்பு நன்மைகளைக் கோரும்போது
இறந்த உறுப்பினர்களின் இறப்புச் சான்றிதழ் (கட்டாயம்)
திருமணச் சான்றிதழ்
பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்
பராயமடையாதவர் விடதய்தில் பாதுகாவலின் விவரங்கள் அடங்கிய “எல்3” படிவம் மற்றும் பாதுகாவலரின் பெயர் மற்றும் பராயமடையாத பிள்ளைகளின் பெயர் மற்றும் அவர்களின் வயது என்வற்றை உறுதிப்படுத்துகின்ற கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலர் ஊடாக தொழில் ஆணையாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதம்
நன்மைகளின் மீளளிப்பினைப் பெற்றோர்கள் கோருகின்றபோது
இறந்த உறுப்பினரின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்
மேலே குறிப்பிட்டுள்ள எந்தவொரு படிவத்தையும் மாவட்டத் தொழில் திணைக்கள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் வேலை செய்த கம்பனி தற்போது தொழிற்படாதிருக்குமாயின் தொடர்பான மாவட்ட தொழில் அலுவலகத்தில் இருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.