ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (செப்பரம்பர் 27) நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்புற இடம் பெற்றது.
இன்று காலை 09.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம் பெற்ற இந்நிகழ்வு மிக சிறப்பாக ஒழுங்கமைப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது
நெடுந்தீவு உறவுகளாய் இலங்கையின் பல பிரதேசங்களில் இருந்து நெடுந்தீவான் எனும் உணர்வுடன் பலர் நெடுந்தீவில் ஒன்றினைத்திருந்தமையினை காணமுடிந்தது மிக்க மகிழ்ச்சியான சந்தர்ர்பமாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
மங்களவிளக்கேற்றி மதகுருமார்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் ஊரும் உறவும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.தர்மலிங்கம் கிருபாகரன் அவர்களால் அமைப்பு குறித்த விளக்கம் வளங்கப்பட்டதுடன், பொதுமக்களது கருத்துக்களும் பெறப்பட்டது
பொதுமக்கள் கருத்தில் பல்வேறு மட்டங்களில் இருந்தும் எமது தீவகத்திற்கு தேவையான பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. முன்வைக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி அதற்கான பதில் ஒருங்கிணைப்பாளரினால் வழங்கப்பட்டது
இவ்வமைப்பின் வளர்ச்சியில் தாமக முன்வந்து இணைந்து கொள்ளுமாறும் சரியான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சரியான திட்டமிடல்களுடன் எதிர்காலத்தில் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
உண்மையில் ஊரும் உறவுமாக பலர் ஊரில் இணைந்து கொண்டமை மிக்க சந்தோசமான நிகழ்வு என கலந்து கொண்ட பலரும் கருத்து தெரிவித்துடன் சரியான முறையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்
நாட்டு நிலமைகளை கருத்திற் கொண்டு அடுத்த ஆண்டு சர்வதேச நாடுகளில் வாழ்வோரையும் இணைத்து நெடுந்தீவு பெருவிழா என்கின்ற ஒன்றை அரங்கேற்ற தீர்மானித்துள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர் கருத்து தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்க விடயமாகும்.