ஊடகவியலாளர்கள் இருவரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், பொலிஸாரும் முரண்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்களிடம் நேற்று(ஜூன் 21) பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி, இரணைமடுவில் உள்ள பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் த.பிரதீபன் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் த.பரமசிவன் ஆகியோரிடமே வாக்குமூலம் பெறப்பட்டது.

மருதங்கேணியில் ஏற்பட்ட முரண்பாட்டுச் சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது. அந்தக் காணொலிகள் மற்றும் சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானமை தொடர்பாகவே ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

Share this Article