ஊடகப்பயிற்சிப் பட்டறை தொடர்பில் நெடுந்தீவு இளைஞர் யுவதிகளுக்கான அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இளையோர்கள் மத்தியில் சமூக ஊடகங்களுடனான ஈடுபாட்டை ஏற்படுத்தும் நோக்கோடு கிறிஸ்வ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்ட சமூகத் தொடர்பு ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் ஊடகப்பயிற்சி பட்டறை ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளைமறுதினம்(ஒக்ரோபர் 15) ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைநதி கக்தோலிக்க ஊடகமைய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இப் பயிற்சிப்பட்டறையில் ஊடகத்துறையில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்ற முடியும்.

ஊடகத்துறையில் பயிற்சிபெறவும் துறைசார்ந்து தகமை சான்றிதழை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

நிகழ்ச்சித்திட்டத்தில் பயிற்சிபெற ஆர்வமுள்ள நெடுந்தீவு இளைஞர் யுவதிகள் தங்கள் விபரங்களை நெடுந்தீவு பங்குப்பணிமனையில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தங்களுக்கான ஏற்பாடுகள் மற்றும் இதரசெலவுகளுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நெடுந்தீவு பங்குத்தந்தை அறிவித்துள்ளார்.

Share this Article