உள்ளுராட்சி வேட்புமனுக்களை ரத்து செய்யத் தீர்மானம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு பொது நிர்வாகம் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

குறித்த ஆலோசனைக்குழு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் நேற்று(செப்ரெம்பர் 21) கூடியது.

வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தேர்தல் வேட்பாளர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share this Article