உயரப்புலத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட தையல் நிலையம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உயரப்புலம் கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட தையல் நிலையம் நேற்று (பெப்ரவரி 17) திறக்கப்பட்டது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் கிராம அலுவலர் பிரிவில் உயரப்புலம் மகளிர் அமைப்பினருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தத் தையல் நிலையம் அமைக்கப்பட்டது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் மற்றும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை இணைந்து இந்தத் தையல் நிலையத்தைத் திறந்தனர்.

இந்த நிகழ்வில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அலுவலர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Share this Article