உடுவில் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டதிருமதி. பிறேமினி பொன்னம்பலம் இன்றைய தினம் (ஒக்.13) தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இருந்து தமக்கானநியமனக் கடிதத்தினை இன்று பெற்றுக்கொண்டார்.
இவர் முன்னர் சங்கானை பிரதேச செயலக பிரிவுக்கான பிரதேச செயலாளராககடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.