உடுவில் இந்து இளைஞர் மன்றத்தின் நாவலர் விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் நாளை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உடுவில் இந்து இளைஞர் மன்றம் நடத்தும் நாவலர் விழாவும், பாலர் பாடசாலை மாணவர்களின் பரிசளிப்பு விழாவும் நாளை (மார்ச் 19) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

உடுவில் மேற்கு பாலர் பாடசாலை மண்டபத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு மன்றத் தலைவர் தி.தியாகச்சந்திரன் தலைமையில் நிகழ்வு நடைபெறவுள்ளது.

பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழ உதவிப் பதிவாளர் சுப்பிரமணியம் ஐங்கரனும், சிறப்பு விருந்தினராக ஊர்காவற்றுறைப் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சைவப்புலவர் பொன் சந்திரவேலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Share this Article