ஈழ தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்தது – கலாநிதி விக்கிரமபாகுகருணாரத்ன!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தமிழர்களுக்காக குரல்கொடுத்த புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதிவிக்கிரமபாகு கருணாரத்ன தனது 81 வயதில் காலமாகியுள்ளார்.

விக்கிரமபாகு கருணாரத்ன, இடதுசாரி அரசியலுக்காகத் தன் இன்னுயிரைதியாகம் செய்து, மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் தன்கொள்கைகளுக்காக நின்று போராடிய தலைவர் ஆவார்.

 

இவர் தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்துஅது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்துவந்தவர்களில்ஒருவர்.கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில்போட்டியிட்டுருந்தார்.

அத்துடன் இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்டதரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறிவந்திருந்திருந்தார்.

 

மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள்தொடர்பான நம்பிக்கை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்குமீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்கமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விக்கிரமபாகு நீண்டகாலம் சுகவீனமுற்றிருந்த நிலையில்காலமாகியுள்ளார் அவரின் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும்இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் நேர்மையான பெரும்பான்மை இன நண்பர்கள் எனும் பட்டியலில்அமரர் தோழர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு என்றென்றும்தனித்துவமான இடமிருக்கும்.

இவருடைய இழப்பு இலங்கையில் இருக்கும் இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல, தங்களின் அடிப்படை உரிமையை கோரி நின்று போராடுகின்றஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும்.

Share this Article