கோப்பாய் வடக்கு இராசபாதை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளம் தவில் கலைஞரான பிரசாந் சச்சின் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கலை ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிடைத்த தகவல்களின் படி, அவர் நேற்று (24.06) புங்குடுதீவு பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் நடைபெற்ற தவில் கச்சேரியில் பங்கேற்றிருந்தார். பின்னர் அச்சுவேலி பகுதியில் நடைபெறவிருந்த மற்றொரு தவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அங்கு செல்லாத நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
பிரசாந் சச்சின் 8 வயதிலேயே தவில் இசைக் கலைப் பயணத்தை ஆரம்பித்தவர். தனது திறமையான வாசிப்பின் மூலம் குறுகிய வயதிலேயே பலரின் பாராட்டையும் அன்பையும் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.