இலவச யோகக்கலை வகுப்புக்களின் புதிய பிரிவு ஆரம்பம்!- விண்ணப்பம் கோரல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகு வழங்கும் இலவச யோகக்கலை வகுப்புக்களின் புதிய பிரிவு எதிர்வரும் 9 ஆம் மாதம் 23 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப் பயிற்சிநெறியானாது சுமார் 03 மாத காலப்பகுதியை உள்ளடக்கியது.பயிற்சி முடிவில் பங்குபற்றுனர்களுக்கான சான்றிழ்கள் வழங்கப்படும்.

நல்லூர் மங்கையர்கரசி வித்தியாலயத்தில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் காலை 6.00 – காலை 8.00 மணிவரை இடம்பெறும்,
19 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பப் படிவத்தின் வன்பிரதிகளை வடக்கு மாகாண கல்வி அமைச்சு இளைஞர் விவகார அலகு, செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் பெற்றுக் கொள்ளமுடியும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்புகளுக்கு 021 222 2203

Share this Article