இலங்கையில் கூரைமேல் சூரிய மின் தகடு திட்டங்களுக்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆற்றல் துறை நிபுணரும் மின் பொறியியலாளருமான அசோகா அபேகுணவர்தன எச்சரித்துள்ளார்.
சூரிய மின் தகடு குறித்த அமைச்சரவை முன்மொழிவும் காணாமல்போய்விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட புதிய வழிமுறையின் குறைபாடுகளையும் அவர் விளக்கியுள்ளதுடன், அமைச்சரவை குறிப்பையும் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கையில் கூரை சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புகள் இலங்கை மின்சார சபை எதிர்பார்த்ததை விட வேகமாக நிறுவப்பட்டு வருவதாலேயே புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூரை சூரிய மின் உற்பத்தி பகல் நேரத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. பகல் நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து இரவில் பயன்படுத்துவதற்கு மின்சார சபை தயாராக இல்லை.
எனவே, 2030-ஆம் ஆண்டுக்குள் அமையவிருக்கும் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து அந்த அளவு மின்சாரத்தைப் பெற மின்சார சபை தயாராக இல்லாததால், மின்சார அமைப்பு தொடர்ந்து தடைபடக்கூடும்.
இவை ஒரு புறம் ஊக்கமற்றதாக காணப்படும் நிலையில், மறுபுறம் அவை வராவிட்டால், அடுத்த ஆண்டு முதல் வரும் ஆண்டுகளில் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாம் நிச்சயமாக மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டியிருக்கும்.
இல்லையெனில், மிகவும் விலை உயர்ந்த எண்ணெய் ஊடாக மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து நாம் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும்.
இதன்போது அது நாட்டிற்கோ அல்லது மின்சார சபையின் புதிய நிறுவனங்களுக்கோ சாதகமான சூழ்நிலையாக இருக்காது. நுகர்வோரின் மின்சாரக் கட்டணமும் வேகமாக அதிகரிக்கும். பல சமயங்களில் மின்வெட்டு ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்