இலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா 19 மில்.டொலர் நிதியுதவி வழங்க தீர்மானம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான அபிவிருத்திக்கான உடன்படிக்கையின்படி, இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவியானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமையும் எனவும் இலங்கை மக்களுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்கு உதவும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Article