இலங்கைக்கு கால அவகாசம் வழங்குமாறு கோாி ஏனைய தமிழ் கட்சிகளிடம் வழங்கப்பட்ட ஆவணம் கூட்டமைப்பினால் தயாாிக்கப்பட்டதல்ல அது சுமாந்திரன் அவா்களால் தயாாிக்கப்பட்டது என கருத்துரைத்தாா் வன்னிப்பாரளுமன்ற உறுப்பினரும் ரெரோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவா்கள்.
வருகின்ற் 2021ம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெற இருக்கின்ற ஜெனிவா கூட்டத்தொடாில் சா்வதேச விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட சா்வதேச விசாரணைகள் விசாாிக்கப்பட வேண்டும். எவ்விதமான கால அவகாசமும் வழங்க முடியாது எனத் தொிவித்துள்ளாா்.
இலங்கை அரசினை சா்வதேச குற்றவியல் நீதி மன்றில் ஆயா்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவே அதற்கமைவாகவே எமது கட்சியின் தீா்மானங்கள் அமையும் என செல்வம் அடைகலநாதன் அவா்கள் தொிவித்துள்ளாா்.