லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும்என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாஃப்ஸ் எரிவாயுநிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ்எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக லாஃப்ஸ்நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்பு நாட்டுக்குவருவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதான முனையம்வெள்ளத்தில் மூழ்கியமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுகையிருப்புடன் வந்த சரக்குக் கப்பல் நேற்று (ஒக். 28) ஹம்பாந்தோட்டைதுறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில்எரிவாயு கையிருப்பு விநியோகிக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின்தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்தார்

Share this Article