2026 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்டிருந்த வருடாந்த வருமான இலக்கை விட அதிக வருமானத்தை உள்நாட்டு இறைவற திணைக்களம் ஈட்டியுள்ளது.
அதற்கமைய, 2,402 பில்லியன் ரூபாய் வருமான இலக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 16 ஆம் திகதியாகும் போது 2,441.9 பில்லியன் ரூபாய் வருமானத்தை உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஈட்டியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அதே திகதியில் 491 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானத்தை அந்த திணைக்களம் ஈட்டியுள்ளது.
இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 115 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த முன்னேற்றமானது வரி நிர்வாகத்தின் வலிமை, வரி வருமானத்தைச் சேகரிப்பதில் உள்ள வினைத்திறன் மற்றும் வரிச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகச் செயற்படுவதில் மக்களிடையே காணப்படும் ஈடுபாட்டினைப் பிரதிபலிப்பதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.