இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இன்று (செப்ரெம்பர் 20) அதன் தவிசாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்கிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈட்டர் தாக்கதலை அடுத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று சிகிச்சை நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலயே இருந்து வந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் இன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் அதன் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டது.