இலங்கையில் இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.
கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய அரச ஊழியர்களே ஓய்வு பெறவுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கையின்படி எதிர்வரும் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் 800 வெற்றிடங்கள் உள்ளன என்றும், விரைவில் பரீட்சைகள் நடத்தப்பட்டு வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.