இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்பில் அவசர கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகங்களில் அண்மைய நாட்களில் இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில் வடக்கு கிழக்கிலுள்ள சைவ சமயம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தா சபையினர் , ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்தவர்களுக்கு அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (மார்ச் 31) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு நல்லை ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலுக்கு மேற்குறிப்பிட்ட அமைப்புக்களைச் சார்ந்த மூன்று பிரதிநிதிகளை தவறாது சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் மூலம், தற்போது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள இந்துக் கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் சைவ மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கவேண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் பத்திரிகையாளர்களுக்கு உடனே தெரியப்படுத்தப்படும் என்பதையும் நல்லை திருஞன சம்பந்தர் ஆதீனம் அறிவித்துள்ளது.
Share this Article