இந்தியாவுடனான மின்னிணைப்பு இறுதி அறிக்கை பூர்த்தி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மின் இணைப்பு தொடர்பான இறுதி அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மதுரைக்கும், மன்னாருக்கும் இடையிலான 280 முதல் 300 கிலோ மீற்றர் இதற்குப் பொருத்தமான பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தேச மதிப்பீடு தற்போது உள்ள செலவினத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட்டுள்ளது. சிலவேளை மதிப்பீட்டுத்தொகை அதிகரிக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article