Tuesday, December 6, 2022

இணையவழிக் கற்கைநெறிகளை வடமாகாண கல்வித் திணைக்களம் ஒருங்கிணைத்துள்ளது.

Must Read

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் பாடசாலைகள் அனைத்தும் 13-17 ஆம் திகதி வரை மீளவும் மூடப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண மாணவர்களுக்கான இணையவழிக் கற்கைநெறிகளை வடமாகாண கல்வித் திணைக்களம் ஒருங்கிணைத்துள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் தரம் 6-13 வரையான மாணவர்களுக்கான இணைய வழிக்கற்கை நெறிகள் இடம்பெற்று வருகின்றன. பாட நேரசூசி மற்றும் பாட அட்டவணைகளை, வட மாகாண கல்வித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், முகப்புத்தகம் மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முகப்புத்தகம், வைபர் குழுமம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் யூடியூப்பில் பதிவிறக்கப்படும் எனவும், இதனால் மாணவர்கள் விரும்பிய நேரத்தில் பார்த்து பயன்பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வைபர் குழுமத்தின் லிங் இதோ:

https://invite.viber.com/?g2=AQAy2yJGOoj7m0tTnlkh%2Fhu%2BkQ6S5EO7vycErdOHAkv%2FgJFVr32SwhrIPYxWBRaT

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img