இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கேற்ற கஜேந்திரகுமார்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நேற்றுமுன்தினம்(ஒக்ரோபர் 2) இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.

அதன்போது முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தியதுடன் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPG-T) கன்சர்வேடிவ் உறுப்பினர்களையும் சந்தித்துள்ளார்.

தமிழர்களுக்கான கன்சர்வேடிவ் வரவேற்பு நிகழ்வில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று, அங்கிருந்த கன்சர்வேடிவ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் உரையொன்றையும் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article