கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வீடுகளில் ஆள்கள் இல்லாத நேரங்களில் நகைகள் திருடப்பட்ட சம்பவங்களின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் துடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவில் இவ்வாறு திருடப்பட்ட 18 பவுண் நகைகள் தொடர்பில் முறையிடப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணகைளின் அடிப்படையில் திருநெல்வேலியைச் சேர்ந்த 22 வயதான பிரதான சந்தேகநபர், திருட்டு நகைகளை வாங்கி உருக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் , அவருக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் பெண்ணொருவர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட நகைகளில் 10 பவுண் மீட்கப்பட்டுள்ளது என்றும், மன்னார் மற்றும் திருகோணமலையில் அடகு வைக்கப்பட்டுள்ள மேலும் ஒரு தொகுதி நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.