அஸ்வெசும – புதுப்பிக்க அறிவுறுத்தல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் வருடாந்தத் தகவல் புதுப்பிப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இந்தப் புதுப்பித்தல் நடவடிக்கையில் பங்கேற்பது கட்டாயமாகும் என்று சபை வலியுறுத்தியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் அஸ்வெசும திட்டத்தில் முதன்முறையாகப் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் அல்லது பெறாத அனைத்துக் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த வருடாந்தத் தகவல் புதுப்பித்தலை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை 2024 ஆம் ஆண்டில் தமது மனக்குறைகளைத் தெரிவித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில், அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

புதுப்பித்தலுக்குத் தேவையானவை

  • குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை
  • செயற்படக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம்.

தகவல் புதுப்பிக்கும் முறைகள்

  • இணையம் மூலம் (Online):
    • இணைய இணைப்புள்ள கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் https://eservices.wbb.gov.lk என்ற இணைய முகவரிக்குச் செல்ல வேண்டும்.
    • QR தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தமது HH இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தகவல் முறைமைக்குள் உட்பிரவேசிக்கலாம்.
    • அதன் பின்னர், தகவல் உறுதிப்படுத்தல் மெனுவுக்குச் சென்று குடும்பத் தகவல்களை உள்ளிடலாம்.
  • அலுவலகம் மூலம் (Offline):
    • பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுத் தகவல் பிரிவுக்குச் செல்வதன் மூலம்.
    • அல்லது கிராம உத்தியோகத்தர் ஊடாக ஆண்டுத் தகவல் புதுப்பிப்பு விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுப் பிரிவில் சமர்ப்பிக்கலாம்.


அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் தனிநபர்களும் தகவல் புதுப்பித்தலில் பங்கேற்பது கட்டாயமாகும். இதில் பங்கேற்காத குடும்பங்களும் தனிநபர்களும் அடுத்த ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவுக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்று நலன்புரி நன்மைகள் சபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Share this Article