அவசர நிவாரண உதவிகளுக்காக அரசு புதிய நன்கொடை தளத்தை அறிமுகப்படுத்தியது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அதிதீவிர வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக, நிதி பங்களிப்புகளை எளிதாக்கும் புதிய உத்தியோகபூர்வ இணையதளத்தை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

“Stand With Sri Lanka” எனப் பெயரிடப்பட்ட இந்த இணையதளம், https://donate.gov.lk/ என்ற முகவரியில் செயல்படுகிறது.

உலகளாவிய சமூகம், வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் சர்வதேச அளவில் உள்ள அனைவரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்த வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பாக நிதி பங்களிப்புகளை வழங்க இந்த தளத்தைப் பயன்படுத்தலாம்.

இந்த தளத்தில், நன்கொடைகளை பாதுகாப்பாகவும் வெளிப்படையாகவும் செலுத்துவதற்கான முழுமையான வழிகாட்டுதல்கள், தேவையான கணக்கு விபரங்கள், மற்றும் அனைத்து நிதிப் பங்களிப்புகளின் அதிகாரப்பூர்வ தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

பெறப்படும் நன்கொடைகளின் 100%வும் அரசாங்கம் மேற்கொள்ளும் அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கு நேரடியாக பயன்படுத்தப்படும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அவை கீழ்வருமாறு:

  • இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குதல்

  • நோய் பரவலைத் தடுக்கும் வகையில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துதல்

  • காயமடைந்தவர்கள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு அவசர மருத்துவ சேவைகள் வழங்குதல்

  • சொத்துகள் அனைத்தையும் இழந்தவர்களுக்குத் தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் நிவாரணப் பொதிகளை வழங்குதல்

Share this Article
Leave a comment